Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. காகிதமில்லா செமஸ்டர் தேர்வு…. உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்  மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகங்களில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வு நடத்த உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செமஸ்டர் தேர்விலேயே 20 சதவீதம் தேர்வுகளை காகிதமில்லா முறையில் நடத்தவும். Open University- யில் சோதனை முறையில் காகிதமில்லா செமஸ்டர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |