முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முனைவர் பட்டம் பயலும் மாணவர்கள் அனைவரும் முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்வு இதழ்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது இல்லை என ஆய்வின் மூலம் தகவல் வெளியானது.
பெரும்பான்மையான ஆராய்ச்சி மாணவர்கள் தரமான ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என தெரிய வந்துள்ளதால் இந்த நடைமுறையை மாற்ற பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்துள்ளது.எனவே விரைவில் நாடு முழுவதும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது கட்டாயம் இல்லை எனும் விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு முடிவு எடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.