Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது.

இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைவரும் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட கால கெடுவுக்குள் விடைத்தாளை அனுப்பி வைக்காததால் மதிப்பீடு செய்யப்படவில்லை என பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத் தாள்களுக்கு ஆப்சென்ட் போட்டிருந்தால் தவறு என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வுகள் ஆல் கல்வித் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்தல்கள் மட்டுமே நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |