ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் டேட்டா இல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத சூழலுக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மாணவர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். அதாவது கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.