நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியோக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருது ஆணையம் தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் சிறப்பு குழுவை தேசிய மருத்துவ ஆணையம் அமைத்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அளித்த புகார்கள் மீதான விவாதம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியேகமாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நேரடியாக புகார் தெரிவிக்க முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.