Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா?….. இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இன்று  முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு இன்று  முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்குகிறது. கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும் தனியார் கல்லூரிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |