Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க…. அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கடந்த ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன் பிறகு  கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அண்ணா பல்கலைகழகத்தில் இணைப்பு பெற்று அண்ணா பல்கலை பாடத்திட்டத்தின் கீழ் பி.இ., பி.டெக்., பி.ஆர்க், எம்.ஆர்க். மற்றும் எம்.பிளான் ஆகிய பட்டப்படிப்புகள்  படித்து வரும் மாணவர்களுக்கு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான பருவ தேர்வுகள் நேரடியாக  நடத்தப்படும்.

அதனைதொடர்ந்து இறுதியாண்டு பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் டிசம்பர் 3 வது வாரத்தில் நேரடியாக நடத்தப்படும். அதனைப்போலவே செய்முறைத் தேர்வுகளை நேரடியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படித்து விட்டு வெளியேறிவதால் வேலைவாய்ப்பு பெற்று தருவது சிக்கல் நீடித்து வருகிறது.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 263 ஆவது சிண்டிகேட் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் மாணவர்களின் திறனை தயார்படுத்த பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பாண்டு கல்வியாண்டில் பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களுக்கு படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |