Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர் தற்கொலை…. இதுதான் காரணமா…? விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி திப்பம்பட்டியில் இருக்கும் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரின் மகன் விஷ்ணு பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாதிரி தேர்வு முடிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதி அறையில் விஷ்ணு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஷ்ணுவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சக மாணவர்கள் விஷ்ணுவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விஷ்ணுவுக்கும், திருச்சூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சம்பவம் நடைபெற்ற அன்று தேர்வு எழுதிவிட்டு விடுதிக்கு வந்த விஷ்ணு அந்த பெண்ணிடம் பேசிய போது இருவருக்கும் இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் விஷ்ணு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |