தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிப்படிப்பை தொடர்ந்து கல்லூரிகளில் சேர்ந்த உயர் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும்.
இதற்காக தமிழக அரசு 698 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் சேர அந்தந்த கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முகாம் அடுத்த மாதம் நவம்பர் 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாம் மூலமாக புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகள் சேரலாம்.அது மட்டுமல்லாமல் கடந்த முறை பதிவு செய்ய தவறிய இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் எனவும் முகாமிற்கு வரும் மாணவிகள் உரிய சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.