Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை” நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்…. இந்த நிலை தொடருமா…? வருத்தத்தில் பெற்றோர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக மாணவிகள் கை காட்டியுள்ளனர்.

ஆனால் சிறிது தூரம் சென்று ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் ஓடி சென்று பதற்றத்துடன் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது இந்த பேருந்தில் எதற்காக ஏற வேண்டும். வேறு பேருந்தில் ஏற வேண்டியதுதானே என கண்டக்டர் கூறியுள்ளார். அந்த மாணவிகள் எதுவும் பேசாமல் இருந்ததால் கண்டக்டர் கல்லூரி பகுதிக்கு தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்காமல் மார்த்தாண்டம் பம்மத்தில் மாணவிகளை இறக்கி விட்டுள்ளார். இதனால் வேறு பேருந்தில் மாணவர்கள் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் போக்குவரத்து உயர் அதிகாரியிடம் புகார் அளிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |