இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்த வகையில் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி முதல்வர், பெண் விடுதி காப்பாளர் போன்றோர் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் அருகே சண்முகா நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கல்லூரியில் கடந்த 2021 ஆம் வருடம் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை அந்த கல்லூரியின் முதல்வரும் குளித்தலை காவிரி நகரை சேர்ந்த வக்கீலுமான செல்வகுமார் ஆகியோர் பலமுறை பாலியல் தொந்தரவு செய்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
அதற்கு கல்லூரியின் விடுதிக்காப்பாளராக பணிபுரிந்து வரும் அமுதவல்லி மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டு சமையல் மற்றும் பராமரிப்பு பணி செய்து வந்த மற்றொரு மாணவி போன்ற இரண்டு பேரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகார் அடிப்படையில் குழுக்களை அனைத்து மகளிர் போலீசார் மூன்று பேர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரான அந்த தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டு சமையலாளராக அந்த கல்லூரி மாணவியை அவரது சொந்த ஊரிலே குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடந்த மே மாதம் கைது செய்து இருக்கின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தில் குமார் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இரண்டு பேரையும் கடந்த மே மாதம் போலீஸர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வேண்டுகோளின் பெயரில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்படி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில்குமார் மற்றும் அமுதவல்லி போன்ற இரண்டு பேர் மீது குண்டச்சிட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான கடிதத்தை சிறையில் இருந்து அவர்களிடம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழங்கியுள்ளார்.