Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியின் காதல்…. வாலிபர்கள் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரைபுளியமரம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரி மாணவியை காதலித்துள்ளார். பின்பு இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியை  பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கதிர்,  தனது நண்பரான பெரியவேடி என்பவரிடம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பெரியவேடியும், அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கதிர் மற்றும் பெரியவேடியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |