Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்…. வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை…… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!

கர்நாடகம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மங்களூரு கோட்டேகார் அருகில் தேரலகட்டே பகுதியில் இர்பான்(28) என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பியூ கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். அதன்பிறகு இர்பான் கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை வழிமறித்து சிக்கமகளூருக்கு காரில் கடத்திச் சென்றுள்ளார். சிக்கமகளூருவில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனிடையில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை என்று பெற்றோர்கள் உல்லார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இர்பான், கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார் என்று தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிக்கமகளுரூக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டு இர்பானை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். இதுகுறித்து மங்களூரு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்து உல்லால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவித்ரா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி சாவித்திரி பட் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அப்போது, இர்பான் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றச்சாட்டுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கடத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டலுக்கு ஓராண்டு சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், வழிமறித்த குற்றத்திற்கு 5 மாதம் சிறையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |