அரசுப் பள்ளி ஆசிரியை கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் .
சென்னை பெரம்பூரில் இருக்கும் மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
தகவல் அறிந்த அரும்பாக்கம் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .இவரது இடது கையின் மணிக்கட்டில் கத்தியால் கிழித்த காயம் இருப்பதாக போலீசார் கூறியுள்ளார் . 5 ஆண்டுகளுக்கு முன் ஹரிசாந்தி டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றி வந்துள்ளார் . பின் அரசு வேலை கிடைத்ததால் கல்லூரியில் இருந்து விலகி ,பள்ளிக்கு சென்றுள்ளார் .இந்நிலையில் இவர் கல்லூரியை விட்டு நீங்கி இருந்தாலும் அடிக்கடி கல்லூரிக்கு வந்து பழைய நண்பர்களைச் சந்தித்து செல்வது வழக்கம்.அந்த வகையில் நேற்று மதியம் கல்லூரிக்கு வந்த அவர் பேராசிரியர் நடராஜன் மற்றும் சிலரிடம் அதிகநேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்
.இந்நிலையில் கல்லூரி நேரம் முடிந்தும் ஹரிசாந்தி அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படும் நிலையில் அவர் பேசிய அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர் .மேலும் தெலுங்கு வகுப்பறை,பிற இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .