Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த பிளம்பர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கல்லூரி வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியில் மணி(33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசீர் மனுவேல் என்ற மகன் இருந்துள்ளார். பிளம்பரான ஆசீருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 11-ஆம் தேதி ஆசீர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தளக்குறிச்சியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் கல்லூரி வாகனத்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசீர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |