Categories
தேசிய செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி எனும் பகுதியில் எஸ் ஆர் எம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாதன் என்பவர் கடந்த வியாழக்கிழமை அன்று வழக்கம் போல் வகுப்புக்கு சென்று விட்டு அதன் பின் தங்கி இருந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கின்றார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக விஸ்வநாதன் அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது இதனால் சந்தேகம் அடைந்த நண்பர்கள் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து இது கொலையா அல்லது தற்கொலையா என்னும் நோக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மாணவன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளது அதையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |