Categories
தேசிய செய்திகள்

‘கல்லூரி விடுதி சுவரில் ஹாயாக படுத்து கிடந்த சிறுத்தை’… அலறி அடித்து கொண்டு ஓடிய மாணவிகள்…!!!

மாணவிகளின் விடுதி சுவற்றில் ஒரு சிறுத்தை படுத்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக கல்லூரியின் அருகிலேயே ஒரு விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கல்லூரிகள் மூடப்பட்ட காரணத்தினால் விடுதி வளாகத்தில் ஏராளமான புதர் மண்டி காணப்படுகின்றது. மேலும் மாணவர்கள் நடமாட்டம் இல்லாததால் வனப்பகுதியை ஒட்டிய வன விலங்குகள் அடிக்கடி விடுதிக்குள் வந்து சென்று கொண்டிருந்தது.

தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் மீண்டும் விடுதிக்கு வந்துள்ளனர். கடந்த மாதம் சிறுத்தை ஒன்று நள்ளிரவில் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்ததைக் கண்டு அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று மாணவிகளின் விடுதிக்கு வந்து சுவரின் மீது படுத்து கிடந்தது. இதை பார்த்து அஞ்சிய மாணவிகள் விடுதியின் கதவுகளை மூடிக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர். பின்னர் காவலாளிக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். காவலாளி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தை கீழே குதித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மேலும் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுத்தை கல்லூரி வளாகத்திற்குள் நுழையாதவாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |