ஆஸ்திரேலிய நாட்டுக் கல்வி மற்றும் கலை விளையாட்டுத்துறை அமைச்சர் டேவிட் டேபிள் மேன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முறையை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுடன் நமது பல்கலைக்கழகங்களை தொடர்புப்படுத்தும் நிகழ்ச்சியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்தாலும் நமது மாணவர்கள் அங்கு சென்று படித்தாலும் மேற்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் பெரியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறை சார்ந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் அரசிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் டிஆர்பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு கல்லூரிகளில் பணி அமர்த்த படுவர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.