லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி சீன படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தபோது இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தீபக் சிங்க் என்ற ராணுவ வீரரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவருடைய மனைவி ரேகா தேவி ராணுவ அதிகாரி பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ரேகா, ராணுவ அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி அகாடமியில் சேர உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரே ஆண்டில் தீபக் சிங் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.