Categories
மாநில செய்திகள்

“கல்விக் கொள்கை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை”…. மத்திய கல்வி அமைச்சர் புதிய அதிரடி….!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழ் ஒரு தேசிய மொழி. தாய் மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. இன்று சில நண்பர்கள் ஆதரவாக இல்லை. ஆனால் நாளை அவர்களும் ஆதரிப்பார்கள். கல்வியில் தமிழகம் மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட மாநிலம். மேலும் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பில் தமிழகம் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |