Categories
தேசிய செய்திகள்

கல்விக் கொள்கை குறித்து ஜூலை 29-ல்…. பிரதமர் மோடி உரை….!!!!

நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்குஒப்புதல் அளிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 29 ஆம் தேதி பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துவது குறித்தும், புதிய திட்டங்கள், அதை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் அவர் உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கைக்கு ஜூன் 29 2020 அன்று அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் அவர் எடுத்துரைக்க உள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |