போக்குவரத்துத் துறை:
-
1,580 கோடி மதிப்பீட்டில், 2,213 பிஎஸ் ஸ்டேஜ் ஆறு மாசு கட்டுப்பாட்டு தரம் கொண்ட பேருந்துகள் வாங்க 2020-21 ஆம் ஆண்டில், 960 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து நிதியுதவி பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
-
மத்திய அரசின் பேம் இந்தியா இரண்டு திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்படும்.
-
பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிர்பயா திட்டத்தின் மூலம் 75.02 கோடி ரூபாய் செலவில் அனைத்துப் பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மெட்ரோ ரயில்:
-
மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் மாதவரம் முதல் சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் வரையிலான 52.01 கிலோ மீட்டர் நீளமுள்ள வழித்தடத்துக்கு நிதியுதவி, வழங்க ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். சென்னை மெட்ரோ ரயிலுக்கு பங்கு மூலதன உதவி, சார்நிலைக்கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிக்க 3,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கல்வித்துறை:
-
பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ. 34,181.73 கோடி ஒதுக்கீடு.
-
தொடக்கக்கல்வியில் மாணவர் சேர்க்கை 99.88 விழுக்காடு. இடைநிற்றல் விகிதம் 0.8 விழுக்காடு. புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், பென்சில்கள் உள்ளிட்டவற்றை விலையில்லாமல் வழங்குவதற்காக 2020-21 திட்டத்தில், 1,018,39 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக 966.46 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
158 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 277.88 கோடி ரூபாய் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் உட்கட்டமைப்பு மேம்பாடு.
-
தமிழ்நாட்டில், மாணவர்- ஆசிரியர் விகிதம் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும், போதுமான அளவில் உள்ளது.
-
கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 520.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்படும்.
-
மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்திற்காக 3,202.49 கோடி ஒதுக்கீடு.
-
அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் ஆகியவற்றில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 3,201.30 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
-
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இந்தாண்டு 76,927 மணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 2020-21 நிதியாண்டில் 304.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
உயர்கல்வி ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகளுக்காக 506.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியின் 75ஆம் ஆண்டு நிறைவையொட்டி அரசு சார்பில் உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
-
நிதி நெருக்கடியில் இருந்து மீள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு 225.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
சென்னைப் பல்கல்கலைக்கழகத்திற்கு ரூ.11.72 கோடி ஒதுக்கீடு.
-
உயர்கல்விக்காக மொத்தமாக 2020-21 நிதியாண்டில் 5,052.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
-
சென்னைப் பொருளியல் பள்ளிக்கு (madras school of economics) அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் (institute of special importance) என்ற தரநிலையை வழங்கச் சட்டம் இயற்றப்படும்.