தமிழகத்தில் கல்வி பணிகளில் நிதியாளர் காலி பணியிட தேர்வுக்கு டிசம்பர் 10ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் நிதியாளர் காலி பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
2023 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடைபெறும். கணினி மூலமாக நடைபெறும் தேர்வுக்கு இரண்டு பட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பொது நிர்வாக படிப்பில் முதுகலை பட்டம் அல்லது நிதி சார்ந்த படிப்பில் எம்பிஏ என இரண்டில் ஏதாவது ஒன்றை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.