கல்வி, சுகாதாரத்தை பொது பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அவர், மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சுட்டிக்காட்டினார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வை மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான்.
என்னை பொறுத்தவரை கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு மாநிலம் முழுமையடையும் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நீட் விலக்கிற்கு இரண்டாவது முறையாகநிறைவேற்றப்பட்ட மசோதா அவை ஆளுநருக்கு மாநில அரசு அனுப்பி இருக்கும் நிலையில் இவரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.