இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமானது மத்திய அரசு வாயிலாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் ஆக இருக்க வேண்டும். இதையடுத்து பெற்றோர், பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் ரூபாய்.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 (அல்லது) 11-ம் வகுப்பில் படித்து கொண்டு இருக்க வேண்டும்.
மேற்படி திட்டத்தில் 9, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூபாய்.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஒரு ஆண்டுக்கு ரூபாய்.1 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் PM-YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வானது கணினி அடிப்படையில் நடத்தப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட்.26) கடைசி நாளாகும். அதன்பின் விண்ணப்பங்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நாளை முதல் வரும் 31-ஆம் தேதி வரை ஆகும்.
அதனை தொடர்ந்து தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ஆகும். பின் தேர்வு நடைபெறும் நாள் அடுத்தமாதம் 11-ம் தேதி ஆகும். மாணவ-மாணவிகள் செயல்பாட்டில் உள்ள மொபைல் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், விரிவான தகுதி அளவு கோல்கள் மற்றும் பிற விபரங்களை https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes போன்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.