Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை: தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இலவசமாக புத்தகம், நோட்டு, பேக், மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் சில பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையானது பள்ளியில் பயிலும் முதல் உயர்கல்வி வரை வழங்கப்படுகிறது

அவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகைகளில் ஒன்று தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 10ஆம் வகுப்புக்கு மேற்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகையாகும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு ஒரு முறை பதிவு செய்தால் மட்டும் போதுமானது. அதன்பின் வருடந்தோறும் அதனை புதுப்பிப்பதன் மூலமாக கல்வி உதவித்தொகையை பெற முடியும். அந்த அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் 9 மற்றும் 10ம் வகுப்பு, 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளுக்கும் உள்ள கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான ஆதிதிராவிட மற்றும் கிருத்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட இன மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் பெற்றுக் கொண்டு மாணவர்களுடைய விபரங்களை பூர்த்தி செய்து பதிவேற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்தகைய விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்கு நகல் மற்றும் ஆதார் எண் போன்ற விபரங்களையும் சேர்த்து escholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் பிப்.10ஆம் தேதிக்குள் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Categories

Tech |