தமிழ்நாட்டில் அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறக்கூடிய கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமானது நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்கள் ஊக்கம் பெற்று கல்வியை தொடர வழிவகுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார காரணத்தினால் மாணவர்கள் கல்வி இடை நிற்றல் செய்வதில் இருந்து தடுக்கிறது. இந்த உதவித்தொகை மாணவர்களின் மேல் படிப்பு வரையிலும் வழங்கப்படுகிறது.
அந்த அடிப்படையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மத மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக், ப்ரி மெட்ரிக் உதவித்தொகை திட்டங்கள் செய்ல்படுத்தப்பட்டு வருகிறது. ப்ரீ மெட்ரிக் (9, 10ஆம் வகுப்பு), போஸ்ட் மெட்ரி (10ஆம் வகுப்புகளுக்கு மேற்பட்ட மாணவர்கள்) தற்போது 2021-2022ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக், ப்ரிமெட்ரிக் போன்ற கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தகுதி வாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களிடம் இருந்து புதிய மற்றும் புதுப்பித்தலுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆகவே மாணவர்கள் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்களில் பெற்று பூா்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் உங்களின் சாதி, வருமானச் சான்று மற்றும் மதிப்பெண் சான்றுகள், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் கல்வி இணையதளத்தில் விண்ணக்க வேண்டும்.