Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒண்ணும் முதல் தொழில்துறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உதவித்தொகை பெற scholarships.gov.inஎன்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர். மேலும் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

Categories

Tech |