சிறுபான்மை இன மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்புகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்புக்கு அதாவது 11ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி கொள்ளும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். இத்திட்டம் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.gov.in/schems என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.