Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்… கடைசி தேதி எப்போது…? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவி தொகையும், தொழிற்கல்வி தொழில்நுட்ப கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அந்த வகையில் வருகிற 15-ம் தேதி வரை பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கும் வருகிற 31-ஆம் தேதி வரை பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவி தொகைக்கு மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் தொடர்பான தகவல்களை  https://www.minorityaffairs.in/schems/என்ற இணையதளம்  மூலமாக தெரிந்து கொள்ளலாம் மாவட்ட கலெக்டர் என செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

Categories

Tech |