இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. கொரோனாவில் இருந்து உருமாறிய டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் மேலும் தொற்று பாதிப்பை அதிகரித்து பள்ளிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டியது.
அதன்படி தற்போது இந்தியாவில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகளின் கல்வி உதவித் தொகையை பெற முடியாத மத்திய அரசு ஊழியர்கள் கோரிக்கை சமர்ப்பிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் குழந்தைகளின் கல்விக்கு மாதம் ரூ.2,250 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் முதல் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் இந்த கல்வித் தொகையை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையில் அரசு ஊழியர்கள் சிஇஏ-வுக்கு கிளெயிம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் அதன் தேதி நீட்டிக்கப்பட்டது. கல்வி உதவித்தொகையைப் பெற மத்திய ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் மார்ச் 31 (இன்று) சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.