கல்வி உதவித்தொகைக்காக மத்திய அரசு ரூ.59, 000 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரூபாய் 59 ஆயிரம் கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூபாய் 35, 534 கோடி ஒதுக்கப்படும் என்றும் எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் என்று கூறியுள்ளார்.