ஆந்திரபிரதேசத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத் தொகையை வருடத்திற்கு ரூபாய்.24 லட்சம் என அரசு நிர்ணயித்தது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் 16-ம் தேதி ஆந்திரபிரதேச அரசு வெளியிட்ட அரசாணையில் 2017-2020-ம் வருடத்துக்கான படிப்பு கட்டணத்தொகையை ஆண்டுக்கு ரூபாய்.24 லட்சம் என உயர்த்தி அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தது. இருப்பினும் அரசின் இந்த உத்தரவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திரபிரதேச அரசு சார்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது.
இதை ஏற்று நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் சுதான்ஷூ தூலியா போன்றோர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. அவற்றில் கட்டணத்தொகையானது முன்பு நிர்ணயித்த தொகையைவிட 7 மடங்கு அதிகம் எனவும் எந்த வகையிலும் நியாயமற்றது எனக் கூறிய சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவை ஏற்றுகொண்டதோடு அதில் எந்த தவறும் இல்லை எனவும் தெரிவித்தது. அத்துடன் கல்வி என்பது லாபம் ஈட்டுவதற்கான ஒரு தொழில் அல்ல. எப்போதும் படிப்பு கட்டணத்திற்கு வசூலாகும் தொகையே போதியது எனவும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.