Categories
தேசிய செய்திகள்

கல்வி கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு…. என்னென்ன ஆவணங்கள் தேவை?…. இதோ முழு விவரம்…..!!!!

நாட்டில் அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து எதிர்காலத்தில் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாகும். ஆனால் பள்ளி படிப்புக்கு பிறகு பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் உள்ள மாணவர்கள் பணத்தை கொட்டி நினைத்த படிப்பை படிக்கிறார்கள். ஆனால் ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி கட்டடத்தை செலுத்த போதிய பணம் இல்லாமல் பொருளாதார நிதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு ஒரே வழி கல்வி கடன். தான் ஏனென்றால் தனது குழந்தையை கடன் வாங்கியாவது நன்றாக படித்துவிட்டால் எதிர்காலத்தில் நம்மை போல அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள் என்றும் ஒரு நல்ல நிலைமைக்கு சென்று விடுவார்கள் என்ற எண்ணமும் பெற்றோர்களிடம் உள்ளது. ஆனால் கல்வி கடன் பெறுவதற்காக எந்த வங்கிக்குச் சென்றாலும் இந்த ஆவணம் இல்ல, அந்த ஆவணம் இல்லை என்று கூறி சிறு ஆவணங்களுக்காக நம்மை திருப்பி அனுப்பி விடுவார்கள். அப்போது நமது பெற்றோருக்கும் நாமும் ஏமாற்றம் அடைவது மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அந்த ஆவணங்கள் நம்மிடம் சரியாக இருந்தால் நமக்கான அலைச்சலும் குறையும். அனைத்து வேலைகளும் வேகமாக முடியும் எனவே தான் கல்வி கட்டணம் வாங்குவதற்கு உங்களுக்கு தேவையான சில ஆவணங்களை பற்றி பார்ப்போம்.

  • கல்விக் கடனைப் பெற, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்வது அவசியம்.
  • எந்தவொரு இந்திய வங்கியிலிருந்தும் கல்விக் கடனைப் பெற முதலில் இந்தியக் குடிமகனாக இருப்பது முக்கியம்.
  • உங்கள் வயது 16 முதல் 35 வயதுக்குள் இருப்பது முக்கியம்.
  • நுழைவுத் தேர்வின் மூலம் நீங்கள் தொடர விரும்பும் படிப்பில் சேர்க்கை பெறுவது முக்கியம்.

அதனை தொடர்ந்து இந்தியாவில் உயர்கல்விக்கு அதிகபட்சமாக 10-15 லட்சம் கடன் பெறலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதற்கு, 20 லட்சம் வரை கல்வி கடன் பெறலாம். கல்விக்கடன் பெற எந்த ஆவணங்கள் தேவை என்பதை பார்ப்போம்.

  • நீங்கள் சேரப்போகும் படிப்பு மற்றும் கல்லூரியின் அட்மிட் கார்டு மற்றும் கல்லூரி பற்றிய முழுமையான தகவல்கள்.
  • பாடநெறி கட்டணம் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட ஆவணம்.
  • மதிப்பெண் தாளின் நகல் மற்றும் அது தொடர்பான சில முக்கிய ஆவணங்கள்.
  • வயது மற்றும் அடையாளச் சான்று அந்த வங்கியில் உங்களிடம் கணக்கு இல்லையென்றால், அதனுடன் முகவரிச் சான்றினையும் வழங்க வேண்டும்.
  • பெற்றோரின் வருமானச் சான்று. வேலை செய்திருந்தால் கடந்த இரண்டு மாத சம்பள சீட்டு. வணிகம் என்றால் கடைசி ஆறு மாத வங்கி அறிக்கை.
  • இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள்.
  • படிப்புக்காக வெளிநாடு சென்றால் பாஸ்போர்ட் மற்றும் விசாவின் 1-1 நகல்.

 

Categories

Tech |