கல்வி உரிமைச் சட்டத்தை ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்காக கட்டணம்
தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கட்டாயக் கல்விஉரிமைச் சட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடத்தை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கக்கூடிய மாணவர்களுக்கான கல்வி செலவை அரசே வழங்க வேண்டுமென இந்தச் சட்ட பிரிவுகள் சொல்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு செலவு செய்ய படுகிறதோ அந்த தொகையை அரசு தனியார் பள்ளிகளுக்கும் செலவிட வேண்டும் என்று சட்டப்பிரிவு தெரிவிக்கிறது. இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய தனி குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த குழு அந்த குழு தனியார் பள்ளிகளுக்கு ஏற்படக்கூடிய செலவுகளை கணக்கில் கொண்டு, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கல்வி உரிமை சட்டம் ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை கணக்கிட்டு குறைந்த கட்டணம் வழங்கப்படுகின்றது எனவும், இதனால் தனியார் கல்விநிலையங்கள் பாதிப்பு அடைகிறது என்ற விஷயத்தை மனுவில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
அதோடு இந்த சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரித்தார்கள். இந்த வழக்கு தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.