இன்றைய காலகட்டத்தில் கல்வி மிகவும் அவசியம் ஒன்றாய் உள்ளது. பணபற்றாகுறையால் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் தங்கள் மேற்படிப்பை விட்டுவிடக்கூடாது என்பதுதான் கல்விகடன். அதை இன்னுமே சுலபமாக்கும் முறையாக மத்திய அரசு “பிரதான் மந்திரி வித்யா லக்ஷ்மி கர்யாகிராம்” என்ற திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று அமல்படுத்தினார்.
எப்படி பெறுவது:
1. கடன் உதவி பெரும் மாணவர்கள் Vidhya Lakshmi Portal லில் பதிவு செய்து விண்ணபிக்கலாம். அதாவது www.vidhyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
2. இத்திட்டத்தில் 39 வங்கிகள் இணைக்கப்படும் 128 விதமான கடன்கள் வழங்கப்படுகிறது
3. மாணவர்கள் இதில் அதிகபட்சமாக மூன்று வங்கிகளில் விண்ணபிக்கலாம்
4. வங்கி கடன் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்
5. வங்கியில் வாங்கிய மற்ற கடன்கள் எதுவும் கல்வி கடன் வாங்குவதை பாதிக்காது
6. கல்வி கடன் வாங்குவதற்கு மாணவர்கள் அரசு அங்கீகாரமான UGC அங்கீகாரம் பெற்ற கலூரியில் இணைந்திருக்க வேண்டும்
7. 4 லட்சம் வரை கடன் வாங்கினால் எந்த அடமானமும் தேவையில்லை
8. 4.75 லட்சம் வரை கடன் வாங்கினால் மூன்றாம் நபர் கையெழுத்திட வேண்டும். அடமானம் தேவையில்லை
9. 7.5 லட்சத்திற்கு மேல் வாங்கினால் அடமானம் தேவையில்லை
10. 7.5 லட்சம் வரை கடன் வாங்கினால் அதற்கான வட்டியை மத்திய அரசே மானியமாக மாணவர்கள் படிக்கும் காலத்திற்கும் படித்து முடிந்த ஒரு மாதம் காலம் வரை செலுத்தும்
11. 7.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருந்தால் அந்த தொகைக்கு மாணவர்கள் தான் வட்டி செலுத்த வேண்டும்
12. 7.5 லட்சத்திற்குள் கடன் வாங்கியவர்கள் கடன் தொகையை 10 ஆண்டுகளுக்குள் கட்ட வேண்டும்
13. 7.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்கள் கடன் தொகையை 15 ஆண்டுகளுக்குள் கட்ட வேண்டும்
14. மாணவர்கள் விண்ணபித்து 30 நாட்களில் அவர்கள் விண்ணபித்த வங்கியில் இருந்து ஒப்புதலுக்கான அல்லது நிராகரிப்புக்கான அறிவிப்பு வந்துவிடும்
15. உரிய காரணங்கள் இல்லாமல் வங்கிகள் நிராகரிக்க முடியாது
16. நிராகரிப்புக்கான காரணங்களை Regional Manager அல்லது Managing Director அணுகி அறிந்து கொள்ளலாம்.
17. அல்லது pgportal.gov.in என்ற முகவரிக்கு செய்தி அனுப்பி விவரம் அறியலாம். இது பிரதமரின் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லும். ஒரு மாத காலத்திற்குள் விவரம் அறியலாம்
18. தாங்கும் விடுதி, ஆய்வுக்கூடம், சீருடை, பயணச்செலவு என அனைத்தும் இந்த கல்வி கடனில் அடங்கும்
19. கல்வி கடன் விண்ணபிக்க பெற்றோர் மற்றும் மாணவர்களுடைய PAN கார்டு, அதார் அட்டை, புகைப்படம், வருமான வரி சான்றிதழ் ஆகியவை வேண்டும்
மாணவர்கள் கல்வி கடன் பெற்று தங்களுக்கு விருப்பமான துறையில் சேர்ந்து படிக்கலாம், கல்வி கடன் விண்ணப்பிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பது கல்வி ஆலோசகர்களின் கருத்து ஆகும்