Categories
மாநில செய்திகள்

கல்வி தொலைக்காட்சிக்கு சிஇஓ பதவி…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க கூடிய வகையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயன்பெற்றனர். இந்த கல்வி தொலைக்காட்சிக்கு புதிதாக சிஇஓ பதவியை உருவாக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் ஐந்து முதல் எட்டு வருடங்கள் வரை கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்த முன் அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரானிக் மீடியா, விஸ்காம், மீடியோ புரோடக்சன் படிப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுத்து மற்றும் பேச்சு தகுதியை கொண்டிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தகுதிகள் இதற்கு கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் அனுபவத்தையும் எதிர்பார்க்கும் ஊதியத்தையும் குறிப்பிட்டு அனுப்பலாம். விண்ணப்பத்தை அனுப்பிய பிறகு தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் https://fomsgle/KPVFRSK5JHwf9gd68 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |