தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கல்வித்துறை தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பள்ளிகள் திறக்கப்பட வில்லை. அப்போது மாணவர்கள் கற்றல் குறைபாட்டை போக்குவதற்காக கல்வி தொலைக்காட்சி உதவியாக இருந்தது. இந்த கல்வி தொலைக்காட்சியில் தினந்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் எடுக்கும் வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கிடையில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டித்தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் கட்டமாக கல்வி தொலைக்காட்சி தலைமைச் செயல் அதிகாரி நியமிக்க பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த CEO பதவிக்கு என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.