கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மாணவிகள், பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும். மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்கள் அமர்த்த வேண்டும். உடல் & உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொண்ட கையேடு வழங்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.