கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பியு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டத எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயின்று வரும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அந்த மாநில கோட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கர்நாடகா ஐகோர்ட் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமில்லை என கல்வி நிலையங்களில் ஹிஜாப் பணியை தடை விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த 15 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது கர்நாடக அரசு தரப்பிலும் இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாக்குவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷூ துலியா போன்றோர் அடங்கி அமரவும் முன்பு இந்த மனுக்களை விசாரித்துள்ளது இந்த நிலையில் கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி பல்வேறு வாதங்களை முன் வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக உடுப்பியில் உள்ள கல்லூரியில் கடந்த 2013ஆம் வருடம் மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது.
இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்ற காரணத்தினால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். இதனை அடுத்து மாணவிகளை சில அமைப்புகள் தூண்டிவிடுகிறது ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவை ஆகும் என வாதிட்டுள்ளார். அதேபோல் இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வரபரப்பு விவாதங்களை முன் வைத்துள்ளனர் இந்த நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று உள்ளது. மேலும் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 22ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர். இந்த சூழலில் இந்த வழக்கின் இன்று தீர்ப்பளிக்கப்படுவதாக கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.