தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் கருத்தரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் குறு சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாநில உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.