Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்”…. நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியீடு….!!!!!

கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூபாய் 4000 ரூபாயும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூபாய் 6000 ரூபாயும் முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், பொறியியல் துறை கல்வி உள்ளிட்டவைக்கு ரூபாய் 7000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றது.

மேலும் பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவி தொகையாக ஒரு வருடத்திற்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் இளங்கல பட்ட படிப்புக்கு 5000 ரூபாயும் முதுகலை பட்ட படிப்பிற்கு 6000 ரூபாயும் வழங்கப்படுகின்றது. மாணவ மாணவிகள் இறுதி தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் பிற துறைகளில் இருந்து கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். தற்பொழுது 2022-23 ஆம் நிதியாண்டில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் nagapattinam.nic.in என்ற இணையதள முகவரியிலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி இறுதி நாளாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |