Categories
மாநில செய்திகள்

கல்வி, வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு… முதல்வரிடம் அன்புமணி கோரிக்கை மனு…!!!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தின் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் வன்னியர் தனி இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி பிரச்சனை. மிக பின்தங்கிய சமுதாயமாக இருக்கும் வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |