Categories
அரசியல் மாநில செய்திகள்

களத்தில் இறங்கும் காடுவெட்டி குருவின் மனைவி… பரபரப்பு செய்தி…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக காடுவெட்டி குருவின் மனைவி களத்தில் இறங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசனின் மாவீரன் மஞ்சள் படை அமைப்பு வரும் சட்டசபைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனையடுத்து காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஜெயம்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.

Categories

Tech |