நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா வாழவையல் பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதால் பாப்பாத்தி உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயத்துடன் உயிர் துப்பினர். அந்த காட்டு யானை தொடர்ந்து வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்று நாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி அந்த காட்டு யானை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனால் முதுமலையிலிருந்து வசிம், விஜய் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பான இடத்திற்கு அந்த யானையை விரட்டி சென்று பிடிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.