Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“களரி வித்தையின் யானை போஸ்”… மாஸ் காட்டும் பிரபல நடிகை…!!!

நடிகை லட்சுமி மஞ்சு களரி வித்தையில் யானை போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகையாக வலம் வரும் லட்சுமி மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைக்கான பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். லட்சுமி மஞ்சு ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் 2018 ஆம் வருடம் வெளியான காற்றின் மொழி திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

https://www.instagram.com/p/CbHa-s1O8s0/?utm_source=ig_web_button_share_sheet

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இந்நிலையில் இவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கலரி வித்தையின் யானை போஸ் என்று எந்த பிடிமானமும் இல்லாமல் அவரின் தொடை மேல் ஒருவர் ஏறி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வேற லெவல்ல போட்டோ இருக்கு கெத்தாக இருக்கு என பலவிதமான பாஸிட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |