Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

களிமண்ணால் ஆன சாமி சிலைகள்…. தத்ரூபமாக செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் தெற்கு ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை, 9, 10- ஆம் வகுப்புகள் மற்றும் 11, 12- ஆம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக கருவி இசை, நாடகம், நடனம், மொழித் திறன், கவின் கலை நுண்கலை போன்ற போட்டிகள் நடைபெற்றது.

அப்போது அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணால் ஆன விநாயகர், முருகன் உருவத்தை தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |