செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் இருக்க காவல் துறையினர் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவால் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி மற்றும் வடகடம்பாடி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை களைகட்டியது. ஏராளமான மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மது வகைகளை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் காலம் தாமதமாக வந்த மது பிரியர்கள் கடை மூடிய பிறகு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதனையடுத்து விற்பனை முடிவடைந்த பிறகு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஊரடங்கு நாட்களில் மர்ம நபர்களால் மது பாட்டில்கள் கொள்ளை போகாமல் இருக்க காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர்.