Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

களைகட்டிய மீன்பிடித் திருவிழா… பாய்ந்து பிடித்த பொதுமக்கள்..!!

விராலிமலை அருகே புரசம்பட்டியில் மீன்பிடி திருவிழா களைகட்டியது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகாவில் புரசம்பட்டி பெரியகுளம் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரில் வருடம்தோறும் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது போல மீன்பிடி திருவிழாவும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பருவமழை பெய்ததைடுத்து திருவிழா நடத்த வேண்டுமென்று ஊர் பெரியவர்கள் பேசி முடிவெடுத்தனர்.

அதன்படி நேற்று மீன்பிடித் திருவிழா நடந்தது. இதை அறிந்த நம்பம்பட்டி, சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து குளத்திற்கு பொதுமக்கள் வந்துள்ளனர். இதை தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெரியவர்கள் வெள்ளைத் துண்டை வீசி கொடியசைத்து மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

பொதுமக்கள் தூரி, கச்சா உள்ளிட்ட வலைகளை கொண்டு குளத்துக்குள் இறங்கி மீனை பிடிக்க ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து கெழுத்தி, அயிரை, வளனகெண்டை, குரவை, விரால் உட்பட பல வகையான மீன்களை பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |