Categories
பல்சுவை

களைக்கட்டும் பண்டிகைக்கால விற்பனை…. நொடிக்கு 18-க்கும் அதிகமான மொபைல் போன்கள்…. அதிரடி….!!!!

இந்த பண்டிகை விற்பனையின் முதல் 4 தினங்களில் மட்டும் சுமார் 7 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது. Redseerன் அறிக்கையின் அடிப்படையில், இந்த தள்ளுபடி விற்பனையில் சுமார் 10 மில்லியன் மொபைல் போன்கள் விற்கப்படலாம் என்ற தரவுகள், திருவிழா விற்பனை 2022 சிறப்பாக நடந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. பண்டிகைக்கால விற்பனையின் முதல் 4 நாட்களில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ரூபாய்.24,500 கோடி மதிப்பிலான பொருட்களை விற்றுள்ளது. மூலோபாய ஆலோசனை நிறுவனமான RedSeerன் அறிக்கையின்படி, இந்த காலக்கட்டத்தில் பெரிய இ -காமர்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் 1100 மொபைல் போன்களை விற்பனை செய்தது.

அதன்படி ஒவ்வொரு நொடிக்கும் 18-க்கும் அதிகமான மொபைல் போன்கள் விற்பனையாகிறது. மொபைல்போன்களின் மொத்த விற்பனையின் மதிப்பானது ரூ.11 ஆயிரம் கோடியாகும். பிரீமியம் வகை ஸ்மார்ட் போன்கள் அதிகளவில் விற்பனையாகிறது. பண்டிகைக்கால விற்பனையின் முதல் 4 நாட்களில் அதாவது செப்டம்பர் 22 -25 வரை, இ-காமர்ஸ் தளங்கள் 24.5 ஆயிரம் கோடி ரூபாய் (அல்லது) 3.5 பில்லியன் டாலர் விற்பனையை ஈட்டியுள்ளது. இவை பண்டிகை விற்பனைக்கான மதிப்பிடப்பட்ட மொத்த விற்பனை மதிப்பில் 60 % ஆகும். இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டு பண்டிகைக்காலத்தின் விற்பனையானது, எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

Categories

Tech |